புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வும், கொடி விற்பனையும் ,உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழாவும் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று  வியாழக்   கிழமை நடை பெற்றது. 
திவிநெகும பிரதேச அதிகாரி எ.ஆர்.எம். சாலிஹ்  தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு முதலாவது  கொடி பிரதேச செயலாளருக்கு அணிவிக்கப் பட்டதுடன் . கடந்த ஆண்டு  புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில்   வலய  மற்றும்  பிரிவு மட்டத்தில்  செயற் பட்ட செயற்பாட்டாளர்களுக்கு  நினைவு சின்னங்களும் ,சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. வங்கி மட்டத்தில்  முதலாமிடத்தைப் பெற்ற  கல்முனைக் குடி வங்கி திவிநெகும முகாமையாளர் எஸ்.சதீஸ், வலய முகாமையாளர் ஈஸ்.எல்.ஏ.அஸீஸ்  ஆகியோருக்கு நினைவு சின்னமும் ,சான்றிதழும் வழங்கி வைக்கப் பட்டது . அத்துடன் இரண்டாம் இடத்தைப் பெற்ற  மருதமுனை, நற்பிட்டிமுனை  வலய  வங்கி முகாமையாளர் எம்.எம்.முபீனுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப் பட்டன. கடந்த ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட திவிநெகும  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கப் பட்டன .
திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற  இந்நிகழ்வில்  திட்ட முகாமையாளர் எ.சி.அன்வர், முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ். பரீரா,  உட்பட திவிநெகும  அதிகாரிகள்,  திவிநெகும  சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.கருத்துரையிடுக

 
Top