ஏ.எஸ்.எம்.முஜாஹித்
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலமும் குருதி கொடையாளர்களை பாராட்டும் நிகழ்வும்  ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலை கேட்போர்  கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு  பேரணி பிரதான வீதி வழியாக கல்முனை பஸ் நிலையத்தையடைந்து மீண்டும் அதே வழியாக வைத்தியசாலையை வந்தடைந்ததுடன், 5 மற்றும் 10 தடவைகள் இரத்த தானம் செய்த குருதிக் கொடையாளர்கள் சான்றிதழ், நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர் 
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளா; டாக்டர்  என்.ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்  கலாநிதி டாக்டர்  ஆர்.முரளீஸ்வரன், சத்திர சிகிச்சை நிபுணர்  ரீ.ஆர்.நிமலரஞ்சன் உட்பட வைத்தியர்கள்தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

Post a Comment

 
Top