ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று சனிக்­கி­ழமை காலை 10 மணிக்கு பொத்­து­வி­லுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.
இதன் போது ஜலால்தீன் சதுக்­கத்­துக்கு அரு­கா­மையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முகுது மகா விஹா­ரையை ஜனா­தி­பதி திறந்து வைப்பார்.
பெரும் சர்ச்­சைக்கு மத்­தியில் முஸ்லிம் பிர­தே­சத்தில் சுமார் 60 அடி உய­ரத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள இவ்­வி­ஹா­ரைக்­கான அடிக்­கல்லை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டி வைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த நிகழ்வில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான தயா­க­மகே, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பி.தயா­ரத்ன, அர­சியல் பிர­மு­கர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.
ஜனா­தி­ப­தியின் வரு­கையை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top