இன்று கல்முனைக்கு  விஜயம் செய்த அகில இலங்கை  மக்கள் காங்கிரசின் தவிசாளரும் ,பிரதி அமைச்சருமான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  கலந்து கொண்ட  தேசிய வீடமைப்பு  அதிகார சபை கல்முனை நகர் காரியாலய திறப்பு விழாவுக்கு  அழைக்கப் படாமைக்கு  கல்முனை தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம்.ஹலீம் கண்டனம் வெளியிட்டுள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பாக தெரிவிக்கப் பட்டுள்ளதாவது . பிரமுகர்களை  அழைப்பதற்கான பெயர் பட்டியலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கியதாகவும்  இந்தப் பெயர் பட்டியலில் நட்பிட்டிமுனையில் உள்ள கட்சி சார்ந்த  கல்முனை மாநகர சபை உறுப்பினருடயதோ  அல்லது  என்னுடையதோ  பெயர் இருக்கவில்லை . இது நற்பிட்டிமுனை கிராமத்துக்கு திட்டமிடப் பட்டு புறக்கணிப்பு செயப் பட்டிருப்பதாக  ஹலீம் மேலும் தெரிவித்துள்ளதுடன் .
குறித்த கண்டனம்  தொடர்பாக கட்சி தலைவர்  ரிசாத் பதியுதீன் அவர்களுக்கும் ,தவிசாளர் அமீர் அலி அவர்களுக்கு அறிவித்ததாக தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top