கடந்த மாதம் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட
யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறைப் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட புங்­குடுதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்தியா
 கொலையின் குற்றவாளிகளுக்கு அதிக பட்சமான தண்டனை அவசரமாக வழங்கப்படவேண்டும் என்று இன்று கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  பிரேரணை ஒன்றை சமர்பித்தார்.

கிழக்கு மாகாண சபையின் சபை அமர்வு இன்று 16 காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. அதன்போது கொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top