வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்களின்  வழி காட்டலின் கீழ்  தேசிய வீடமைப்பு அதிகார சபையின்  கல்முனை நகர காரியாலய  திறப்பு விழா வைபவமும் , இலங்கையின் அனைத்து தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில்  செயற்படுத்தப்படும்  100 நாள் 50ஆயிரம் வீடுகள் வேலைத் திடடத்தின் கீழ்  வீட்டுப் பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட நிதிக் கொடுப்பனவு  வழங்கும் வைபவமும்  இன்று கல்முனையில் இடம் பெற்றது. 
கல்முனைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாகவும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு  அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் 110 பயனாளிகளுக்கு கொடுப்பனவு  தொகைகளையும் வழங்கி வைத்தனர்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார்  உட்பட சமயத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

கடந்த அரசாங்கத்தில் கல்முனையில் இயங்கிய இந்த அலுவலகம்  பல முட்டுக் கட்டைகளுக்கு மத்தியில்  கல்முனையில் இருந்து அம்பாறைக்கு இடமாற்றப் பட்டிருந்தது .அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதின் அயராத முய்டர்ச்சி காரணமாக மீண்டும் அது களமுனைக்கு கொண்டுவரப்பட்டதாக பிரதி அமைச்சர் அமீர் அலி அங்கு தெரிவித்தார் கருத்துரையிடுக

 
Top