எம் ஐ. எம். எஸ். அன்வர்
சுமார்  முப்பது வருடங்களுக்கு மேலாக> பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின்போது தராவீஹ் எட்டு ரக்அத்தா இருபது ரக்அத்தா? என்ற இக்கேள்வி எழுப்பப்பட்டு மக்கள் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப் படுவதும் இதன்போது எட்டு ரக்அத்தார்  இருபது ரக்அத்தினரை பித்னாவை> பித்ஹத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறித் திட்டித் தீர்ப்பதும் அதேபோன்று இருபது ரக்அத்தினர்  எட்டு ரக்அத்தினரைத் திட்டித் தீHப்பதும்> அதன் பின்னர்  வரும் பெருநாள் தொழுகையில் கூட பிரச்சனைகள் ஏற்படுத்தப்படுவதும் நாம் அறிந்த விடயம். இது மார்க்கத்தில் கூறப்பட்ட விடயம் எனினும் இதற்கு அப்பால் அரசியல் வாதிகள் மார்க்கத்தில் சில விடயங்களைத் திணிக்க முயல்வதை எந்தவொரு ஜமாஅத்தினரும் கண்டுகொள்ளாமல் அவற்றிக்கு ஆதரவு  வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அண்மையில் நமது ஊர்க்கிராமமான சாய்ந்தமருதில் “ஹர்த்தால”; ஒன்று ஏற்பாடாகி அதற்காக இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகையும் அப்பள்ளிவாயல் பேஷ்  இமாமினால் நடாத்தி வைக்கப் பட்டது. இது மார்க்கத்துடன் சம்பந்தப் பட்டதா அல்லது மார்க்கத்துக்கு முரணானதா? தனிநபர்  ஒருவருக்கேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஜூம்மா போன்ற கூட்டுத் தொழுகைகளுக்கு வாசனைத் திரவியங்களைத் தடவிச் செல்லக் கோரும் இஸ்லாம்> மக்களுக்குப் பல விதத்திலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் “ஹர்த்தாலை” அனுமதித்துள்ளதா? இதற்காக இரண்டு ரக்அத் சுன்னத் தொழுவதைத்தான் அனுமதித்துள்ளதா? எந்தவொரு ஜமாஅத்தினரும் ஏன் இதைக் கண்டும் காணாது இருக்கிறார்கள்? இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர்  என்பதாலா?
ஜனாப் ஷிராஷ் மீராசாகிப் கல்முனை மாநகர முதல்வ ராகவிருந்த போது சாய்ந்தமருது மக்களால் வேண்டப்படாத தனிப்பிரதேச சபை அவரது பதவிக்காலம் முடிந்ததும் ஏன் கோரப்பட்டது? இதற்கு அரசியல் பின்னணி கிடையாதா என்ன?
இதற்கு முன்னர் கூட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  தனது கட்சியை ஆரம்பித்து அக்கட்சியின் யாப்பு குர் ஆன்> ஹதீஸ் எனக் கூறியபோதும்> ஒரு அந்நியப் பெண்ணுடன் ஒன்றாகவிருந்து போட்டோ பிடித்துப் போஷ்டர்  அடித்து அவற்றைச் சந்து பொந்துகளிலெல்லாம் ஒட்டியிருந்த போதும் அந்தப் பெண்ணுடன் கைலாகு செய்த போட்டோக்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் வந்தபோதும் எந்தவொரு ஜமாஅத்தினரோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் உலமா(கா)க்களில் சிலர்  அவ்வேளை முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்காதவன் “காபிர் ” என்ற பத்வாவை வழங்கியிருந்தனர் . அம்பாரை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவம் வேண்டி இங்குள்ளவர்களை நோன்பு பிடிக்குமாறு அத்தலைவH கோரியபோதும் கூட அது சரியென்றோ  என்னவோ உலமாக்கள் அனைவரும் வாழாவிருந்தனர் .
இந்த உலமா(கா)க்களுக்கும் ஜமாஅத்தார் களுக்கும் இஸ்லாத்தில் இருப்பது 100 வீதம்  அரசியல் 51வீதம்> 49வீதம் அரசியல் இஸ்லாத்தில் கிடையாது என்றும் கலீபா நடந்து செல்ல வேலைக்காரன் ஒட்டகத்தில் ஏறிச் செல்வதுதான் இஸ்லாத்தில் இருக்கும் அரசியல் என்றும் தெரியாதா என்ன?. சிறு சிறு அற்ப விடயங்களில் சண்டையிடும் உலமா(கா)க்களும்> ஜமாஅத்தினரும் பித்ஹத்தை> பித்னாவை> ஷிர்க்கை> குப்ரியத்தை ஏற்படுத்தும் விடயங்களில் வாழாவிருப்பதன் மர்மம்தான் என்ன? இந்த உலமா(கா)க்கள் அன்று மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் செய்கைகளை மறுதலித்திருந்தால் அண்மையில் சாய்ந்தமருதில் நடந்தேறிய சம்பவம் அரங்கேறி இருக்காது என்பது தெட்டத் தெளிவான உண்மை. இதன் பின்னராவது> உலமாக்களும்> ஜமாஅத்தாரும் மார்க்க விடயங்களில் அரசியல் வாதிகளின் தீய நோக்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விடுவதன் மூலமே இப்படியான பித்ஹத்> பித்னா> ஷிர்க்> குப்ரியம் போன்றவற்றை இஸ்லாத்திலிருந்தும் இங்கிருந்தும் அப்புறப்படுத்த முடியும்.
  

கருத்துரையிடுக

 
Top