20ஆவது திருத்­தச் ­சட்­டத்தில் இரட்டை வாக்­குச்­சீட்டு முறைமை உள்­வாங்­கப்­ப­டாது அமைச்சரவை அங்கீ­காரம் அளித்­தமை அதி­ருப்தி அளிப்­ப­தாக தெரி­வித்­துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, எஸ்.பி.திசா­நா­யக்க, சம்­ பிக்க ரண­வக்க ஆகி­யோரே இக்­கோ­ரிக்­கை யை நிரா­க­ரித்­தத­ா­கவும் தெரி­வித்­துள்ளார்.
நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட் டம் தொடர்பில் வெளியிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அதில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ள 20 ஆவது திருத்­தம் தொடர்பில் சிறு­பான் மைக் கட்­சி­களும், சிறிய கட்­சி­களும் பெரிதும் அதி­ருப்தி அடைந்­துள்­ளன. நாங்கள் கோரியதன் பிர­காரம் இரட்­டை­வாக்குச் சீட்­டுகள் வழங்­கப்­ப­டா­விட்டால் சிறு­பான்­மை­யினக் கட்­சி கள் மட்­டு­மல்ல ஜே.வி.பி. போன்ற சிறிய கட்­சி­களும் பார­தூ­ர­மாக பாதிக்­கப்­ப­டு­மென்­பதை அமைச்­ச­ர­வையில் சுட்­டிக்­காட்­டி­னே னன்.
எங்­க­ளது நியா­ய­மான கோரிக்­கையை கண க்­கி­லெ­டுக்­காமல் நடப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான நடவடிக்­கை­யொன்று. சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கு அநி­யாயம் நடக்­காமல் பார்த்துக் கொள்­வோ­மென ஜனா­தி­பதி சொல்­வது ஒரு புற­மி­ருக்க, செய­ல­ளவில் அது சாத்­தி­ய­மா­வ­தென்­பது கஷ்­ட­மான விடயமாகவுள்­ளது.
எனது வாக்­கு­வா­தத்­திற்கு குறுக்­காக நின்று அதனை அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, எஸ்.பி.திசாநாயக்க, சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் தொடர்ந்தும் நிரா­க­ரித்து வந்­தனர். அந்த நிலையில் ஜனா­தி­பதி ஓர் உடன்­பாட்­டுக்கு வந்து அதனை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு போவோம் அதன் பின்னர் திருத்­தங்­களைப் பற்றி ஆலோ­சிக்­க லாம் என்றும் கூறி­னார்கள். இரட்டை வாக்குச் சீட்டு விட­யத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று பிடி­வா­த­மாக இருந்­தார்கள். 237 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என அதிகரித்து திட்­ட­வ­ரைவை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பு­வ­தாக தீர்­மா­னித்தனர்.
எனினும் அதன் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவையும் ஜனா­தி­ப­தியையும் சந்­தித்து, சிறு­பான்மை கட்­சி­க­ளோடும், சிறிய கட்­சி­க­ளோடும் மீண்டும் கதைப்பதற்கான உடன்பாட்டுடன் பாராளுமன்றத்திற்கு அனு ப்புங்கள். அவ்வாறு கலந்தாலோசிக்காமல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் பாரதூ ரமான விளைவுகள் ஏற்படும் என்பதை எடு த்துரைத்தேன். என்ன நடக்கப் போகின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

கருத்துரையிடுக

 
Top