ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழா இன்று காலை கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில்  இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றவுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார் 
 நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் , சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். இதன் போது பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.கருத்துரையிடுக

 
Top