சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று (12) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.  சிறுவர் தொழிலை எதிர்ப்போம்’ என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குழந்தை தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ILO வின் 138 மற்றும் 182 ஆவது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இத்தினம் உருவாக்கப்பட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

Post a Comment

 
Top