(யு.எம்.இஸ்ஹாக் )

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இன்று முப்பெரும் விழா பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் விஷேட கல்விப்பிரிவுக்கான புதிய கட்டிடமும் திறந்துவைக்கப்ட்டு  பாடசாலையில் அமைக்கப்பட்ட பச்சைவீடும் திறந்துவைக்கப்பட்டன. இவ்வாறு மூன்று நிகழ்வுகள் ஒரே நேரத்தில் இடம் பெற்றது 
இந் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் பச்சைவீட்டுக்கு நிதி உதவி வழங்கிய தொழிலதிபர் பி.ரவிநாத்பிள்ளை, பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன்  மற்றும் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்ட்டனர். 
கருத்துரையிடுக

 
Top