உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு ஒன்று அம்பாறை மாவடட ஜம் இய்யத்துல் உலமா ஏற்பாட்டில் நாளை  சனிக் கிழமை (06.06.2015) காலை 9.00 மணி தொடக்கம் சாய்நதமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் அமபாறை மாவட்டத்திலுள்ள சுமார் 50 ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளும், மாவட்ட சபையையும் கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 50
உலமாக்களும் கலநது கொள்ளவிருக்கின்றனர்.

உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர சமய, சமூக பொறுப்புக்கள், கடமைகளை நிறைவேற்றவும வழிவகுக்கும் நோக்கில் இந்த செயலமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் யூ.எம்.நியாஸி தெரிவித்தார.
வாழைசசேனை தாருஸ்ஸலாம் அறபுக் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில்; ஸஹாபாக்களின சிறப்புக்கள் எனற தலைப்பிலும் பேருவலை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர்
அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.பளீல்; வரலாற்றுக் காலத்திலிருந்து மஸ்ஜிதுகளின பங்கும் பரிபாலகர்களின் பொறுப்புக்கள மற்றும் கடமைகளும் எனற தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளார்.

அத்துடன் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் எவ்வாறு இணைநது பணியாற்றுவது என்பது தொடர்பான விஷேட கலநதுரையாடலும் இடம்பெறவுள்ளது.
ஏற்பாட்டுக் குழுவின சார்பில் அஷ்ஷெய்க இஸட்ஏ.நதீர், அஷ்ஷெய்க்.எப.எம்.ஏ.அனஸார் மௌலானா( ஆகியோர் இந்த செயலமர்வை நெறிப்படுத்துவர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top