பல வருட காலமாக மின்சாரம் இல்லாமல் இருந்த  நற்பிட்டிமுனை  லோயர் தோட்ட  வீதிக்கு  இன்று  மின்சாரக் கம்பி  இணைக்கும் வேலைகள் ஆரம்பித்து வைக்கப் பட்டன .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி அமைப்பாளரும் ,கல்முனை மாநகர சபை  உறுப்பினரும் , சதோஷ  நிறுவனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமூக அபிவிருத்தி நிலையத்தின் தலைவருமான சி.எம்.ஹலீம் ஆகியோரால்  இப்பணி  ஆரம்பித்து வைக்கப் பட்டது.
லோயர்  தோட்டத்தில் வசிக்கும் நற்பிட்டிமுனை மக்களின் வேண்டுகோளுக்கமைய  அமைச்சர் றிசாத் பதியுதீனின்  நிதி ஒதுக்கீட்டில்  இவ்வேளை திட்டம் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது . கருத்துரையிடுக

 
Top