கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக விமலவீர திஸாநாயக்க இன்று (16) கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று மாத காலமாக நியமிக்கப்படாமல் இருந்த கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் பதவி இழுபறி நிலைக்கு இன்று  தீர்வு கிடைக்கப் பெற்றது. கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (16)  காலை 09.30 மணியளவில் சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் கூடியது.

சபை ஆரம்பிக்கப்பட்ட போதும் சபையிலே அமளி துமளி ஏற்பட்டது. காரணம் சிறி லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான 10 மாகாண சபை உறுப்பினர்கள்  கௌரவ மாகாண சபை உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கடிதம் மூலம் தவிசாளரிற்கு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமையே ஆகும்.
இதனால் சபை அமர்வு 10.30  வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கட்சித்தலைவர் கூட்டம் சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சபை 10.30 மணிக்கு கூடியதும் தவிசாளர் இழுபறியாக அமைந்த கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பான அறிவித்தலை தெரிவித்தார். தமக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்கள் விமலவீர திஸாநாயக்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி சத்தியப்பிரமாணம் மூலம் அறிவித்ததாகவும் அதற்கிணங்க கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக விமலவீர திஸாநாயக்க தெரிவு செய்யப்படுவதாகவும் தவிசாளர் சபைக்கு அறிவித்தார்.

விமலவீர திஸாநாயக்க முன்னர் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top