(பி.எம்.எம்.ஏ.காதர்)
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வூ பெற்ற அதிபர் கே.காலிதீன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், சிறப்பு மலர் வெளியீடும்  நாளை  (12-06-2015)வெள்ளிக்கிழமை பி.ப.4.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவவுள்ளது.
பாடசாலை அதிபர்  எம்.எம்.எம்.முகைதீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான செய்யித் அலிசாஹிர் மௌலானா,எம்.எஸ். சுபைர் ஆகியோருடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனிபா.ஒய்வூ பெற்ற கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெய்னுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் அதிதிகளாக பிரதிக் கல்விப் பாளர்களான என்.சிதம்பர மூர்த்தி, ஏ.எஸ்.இஸ்ஸதீன், எம்.எம்.இஸ்மாலெப்பை, எம்.ரி.எம்.அஷ்ரப்,மற்றும் இராணுவ மேஜர் டி.அனஸ் அஹமட்,ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் எச்.எம்.எம்.ஹமீம், கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.மஃறூப் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். 
நிகழ்வில் ஓய்வூ பெற்ற அதிபர் கே.காலிதீன் பிரதம அதிதி மற்றும் அதிதிகளால்  கௌரவிக்கப்படவுள்ளதுடன் இவருக்கான நினைவு  மலரும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top