ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 

தேர்தல் முறைமை  மாற்றத்தின் போது  இரட்டை வாக்குச் சீட்டை உள்­வாங்­க­வேண்டும் என்ற கோரிக்கை மறுக்­கப்­படும் பட்­சத்தில் அது பாரிய விளைவை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்­ப­டுத்­தி­விடும். அவ்­வா­றான ஒரு சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மாயின் அது எமது அதி­ருப்­திக்­கு­ரி­ய­தா­கவே இருக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

20ஆவது திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பாக சிறு­பான்மை , சிறு அர­சியல் கட்­சி­கள்  நேற்­றைய தினமும்  கலந்துரையாடியுள்ளன  பல்­வேறு சர்ச்­சை­க­ளுடன் இழு­ப­றியில் இருக்கும் இத்­தி­ருத்­தச்­சட்டம் தொடர்­பாக இறுதி முடிவு எட்டப்படுவதில் சிக்கல் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது
தேர்தல் முறையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சியல் அமைப்பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள உத்­தேச 20 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான நேற்­றைய தினம் சிறு­பான்மை, சிறு அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் நடை­பெற்­றது.
முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் இடம் பெற்ற இச்­சந்­திப்பில் அமைச்சர் பழனி திகாம்­பரம், கல்­முனை மாந­கர மேயரும் மு.கா.வின் பிரதி தவி­சா­ள­ரு­மான நிஸாம் காரி­யப்பர், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமிட், ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் கும­ர­கு­ரு­பரன் மற்றும் முர­ளி­ர­கு­நாதன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.
20ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஹெல உறு­ம­யவின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­க­விற்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பாடு, அதன் பின்னர் ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­திகள் வெளியிடும் கருத்­துக்கள், 20ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் தொடர்­பாக இறு­தி­யான முடிவு ஆகி­யவை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்கே இச்­சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.
எவ்­வா­றா­யினும் குறித்த கூட்­ட­த்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய, ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, நவ­ச­ம­ச­மா­ஜக்­கட்சி உட்­பட மேலும் சில கட்­சி­கள் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.
இச்­சந்­திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறு­கையில் இரட்டை வாக்குச் சீட்டை உள்­வாங்­க­வேண்டும் என்ற கோரிக்கை மறுக்­கப்­படும் பட்­சத்தில் அது பாரிய விளைவை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்­ப­டுத்­தி­விடும். அவ்­வா­றான ஒரு சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மாயின் அது எமது அதி­ருப்­திக்­கு­ரி­ய­தா­கவே இருக்கும் என்றார்.
இந்­நி­லையில் எதிர்­வரும் தினங்­களில் மீண்டும் சிறு­பான்மை சிறு அர­சியல் கட்­சிகள் கலந்­து­ரை­யா­ட­வி­ருப்­ப­தாக தெரி­ய­ வ­ரு­கின்­றது.
முன்­ன­தாக இறு­தி­யாக நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது 20ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோ­ரி­டையே இரட்டை வாக்­குச்­சீட்டை நடை­மு­றைப்­ப­டுத்­துவது தொடர்பில் கடு­மை­யான வாய்த்­தர்க்கம் இடம்­பெற்­றி­ருந்­தது.
அதனைத் தொடர்ந்து மு.கா தலைமை, பிரதி செய­லாளர் ஆகி­யோரை மைய­மாக வைத்து ஜாதிக ஹெல உறு­மய கடுந்­தொ­னியில் கருத்­துக்­களை முன்­வைத்­த­துடன் இரட்டை வாக்­குச்­சீட்டை ஏற்­க­மு­டி­யாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மறுபுறத்தில் 20ஆவது திருத் தச்சட்டமூலம் தொடர்பாக ஜனா­தி­பதி தனது இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில் வெகு விரைவில் குறித்த சட்ட மூலம் தொடர்பாக இறுதி முடிவை ஜனாதிபதி அறிவிப்பார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

 
Top