சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா  நோய் பிரிவு  ஏற்பாடு செய்த விழிப்புணர்வு  ஊர்வலமும் அறிவுறுத்தல் கூட்டமும்  இன்று    திங்கட் கிழமை (01)   பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  இருந்து நடை பெற்றது .தொற்றாநோய் பிரிவு  பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் தலைமையில் இடம்பெற்ற   இவ்விழிப்புணர்வு  ஊர்வலத்தில் 
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. அலாவூதீன் உட்பட அதிகாரிகளும், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் உட்பட பொலிஸாரும், கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை.அறபாத் உட்பட  வலய பாடசாலை மாணவர்களும்   ,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்   பலரும் கலந்து கொண்டனர் . கருத்துரையிடுக

 
Top