நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில்  இப்தார் நிகழ்வும் , வட  பகுதி முஸ்லிம்களை  குடியமர்த்துவதற்கான துஆ பிரார்த்தனையும்  இன்று நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் சமூக அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்றது .

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் , சதோச  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீதின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் சமூக அபிவிருத்தி நிலையத்தில் பயிற்சி பெறும் யுவதிகளும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் , அமைச்சர் ரிசாத் பதியுதீனினின் இணைப்பாளரும் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்   தலைவருமான சி.எம். ஹலீம்,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ்  உட்பட முக்கியஸ்தர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top