ஆணைக்குழுக்கள் அமைக்கும் வரையில் பணிகள் தொடர விருப்பம்

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அரச சேவையி லிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்றுக் காலை ஓய்வூதிய திணைக் களத்திற்கு சென்ற அவர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்தது.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தான் தொடர்ந்து கடமையில் இருக்கப்போவதாக தேர்தல் ஆணையாளர் இங்கு தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு ஜூன் 6ஆம் திகதி 60 வயது பூர்த்தியானது. இந்த நிலையில் ஏனைய அரசாங்க ஊழியர்களை போன்று ஓய்வுபெறும் வயது பூர்த்தியடைந்துள்ளதால் தானும் ஓய்வுபெற வேண்டியுள்ளதாக தெரிவித்த ஆணையாளர், 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுகையில் பதவி யில் இருக்கும் ஆணையாளர் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கும் வரை ஆணையாளராக தொடர்ந்து செயற்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஓய்வூதிய திணைக்களத்திற்கு சென்ற ஆணையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார். 19ஆவது திருத்தத்தினூடாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட போது இன்னும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது தெரிந்ததே.

கருத்துரையிடுக

 
Top