வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்தெறிய இன்று(12)  ஜூம்ஆ தொழுகைக்கு பின் தத்தமது கையெழுத்துக்களை பதிவு செய்துமீள்குடியேற்ற தடைகளை தகர்த்தெறிய புறப்படுமாறு விடுத்த வேண்டுகோளை  ஏற்று  இவ்வாறு இன்று  முஸ்லிம்கள் ஒன்றுபட்டு கையொப்பங்களை  இட்ட   மக்கள் அனைவருக்கும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத்  நன்றி தெரிவித்துள்ளார் 
குறிப்பாக கல்முனை தொகுதி வாழ் மக்கள் எப்போதும்  முஸ்லிம் உறவுகளுக்காக தயங்காது குரல் கொடுப்பவர்கள் . கல்முனை மக்கள் குரல் கொடுத்தால் நாட்டில் மாற்றம் ஒன்று  ஏற்படுத்தப் படுவது  இம்மண்ணுக்கு கிடைத்த மகிமை . இதே போன்று எமது கல்முனை வாழ் மக்களால்  இன்று இடப்பட்ட ஒவ்வொரு கையெழுத்தும் வட  பகுதி மக்களின் தலை எழுத்தை மாற்றும் . இதற்காக  ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்  மீண்டும் நன்றி தெரிவிப்பதாக  முபீத்  தனது நன்றி மடலில் தெரிவித்துள்ளார் .
குறிப்பாக  எனது கிராமமான நட்பிட்டிமுனையில்  எனது வேண்டுகோளை ஏற்று ஒன்று பட்டு ஒப்பமிட்ட 2000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல்  நம்பிகையாளர் சபை தலைவர் உட்பட அனைத்து நிருவாக சபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பாக எமக்கு பக்கபலமாக செயற் பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top