ஏ.பி.எம்.அஸ்ஹர்


கல்முனை ஜம்அய்யதுல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்முனை தொகுதியின் சமகால அரசியல் தொடர்பான உலமாக்களக்கான செயலமர்வொன்று அண்மையில்  கல்முனையில் நடை பெற்றது.

கல்முனை ஆஸாத் ப்லாஸாவில் ஜம்அய்யதுல் உலமாவின் கல்முனைக்கிளையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.சுல்தான் கபுரி தலைமையில்  இடம் பெற்ற  இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தின் சாய்ந்தமருது கல்முனைக்குடி மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள உலமா சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் கல்முனை ஜம்அய்யதுல் உலமாவின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவருமான அஷ்ஷெய்க் இஸட்.எம். நதீர் ஷர்கி முஸ்லிம் அரசியல் அன்றும் இன்றும் எனும் தொனிப்பொருளில் விஷேட உரையாற்றினார்  கல்முனைப்பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் தற்போதைய முஸ்லிம் அரசியல் முன்னெடுப்புகள் பற்றிய இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களை மார்க்க ரீதியாக மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் வழி நடத்திச் செல்லும் பொறுப்பை உலமா சபைகள் ஏற்பது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

இதில் கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் யு.எல.எஸ்.ஹமீட் ஹாமி கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் கலாநிதிஎம்.ஐ.எம்.ஜெஸீல் ஸலபி கல்முனை அபிவிருத்தி போரத்தின் தலைவர் அஷ்ஷெய்க்
ஏ.பி.எம்.அஸ்ஹர் ஸலபி உலமாக்கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீத் கல்முனை நகர பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் யு.எல்எம். இக்பால் ஹாமி  அஷ்ஷெய்க் ஏ.எம்.அர்ஷத் நளீமி கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர் மௌலவி எம். ரபீக்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top