சியம்பலாண்டுவயிலிருந்து பொத்துவில் அறுகம்பை நோக்கி சுற்றுலா வந்த உழவு இயந்திரம் பொத்துவில் பிரதான சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் இன்று(2015.06.02) காலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் .

படுகாயத்திற்குள்ளாகியவர்கள் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக ஐவர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொசன் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளானது .அதி வேகமும்  , அதிக பயணிகளை ஏற்றி வந்தமையுமே குறித்த விபத்து க்கான காரணம் என நேரில் கண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர். இதில் 15வயதிற்கும் குறைந்த 05 சிறுவர்கள் பயணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கருத்துரையிடுக

 
Top