வட மாகாண   முஸ்லிம்களின் குடியேற்றத்தினை  உறுதிப்படுத்தி அம்மக்களுக்காக  எமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில்  நாளை வெள்ளிக்கிழமை  கையொப்ப வேட்டை இடம் பெறவுள்ளது . சகல பள்ளிவாசல்களிலும்  இடம் பெறும்  கையொப்ப பதிவேட்டில்  கையொப்பமிடுமாறு முஸ்லிம்கள் அனைவரையும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத்  அழைப்பு விடுத்துள்ளார் .

நாளை ஜும்மா  தொழுகையின் பின்னர்  பள்ளிவாசல்களில் இடம் பெறும் நிகழ்வில் அனைவரையும் கலந்து  அம்மக்களுக்காக தங்களின் கையொப்பத்தை இடுமாறு மாநகர சபை உறுப்பினர் முபீத்  பணிவுடன் கேட்டுள்ளார் .பிரதான நிகழ்வு நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளிவாசலில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன 

கருத்துரையிடுக

 
Top