இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங்ஸ்டார், மருதமுனை ஒலிம்பிக் அணிகள் மோதல்

கல்முனை சனிமவுண்ட் வி.கழகத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், கடந்த ஒரு மாதகாலமாக நடாத்திவந்த மர்ஹும் எம்.ஐ.எம்.சமீம் ஞாபகார்த்த கிழக்கு மாகாண ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் வெள்ளிக்கிழமை இன்று பி.ப 3.30 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு பாடும்மீன், மருதமுனை ஈஸ்ரன்யூத், கோல்ட் மைன்ட் ஆகிய அணிகளை வெற்றி கொண்ட ஏறாவூர் யங்ஸ்டார் வி.கழகத்தினரும் சவளக்கடை அமீர்அலி, கல்முனை பிர்லியன்ட் அணிகளை வெற்றி கொண்ட மருதமுனை ஒலிம்பிக் வி. கழகத்தினரும் மோதவிருக்கின்றனர். அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெறவிருக்கும் மேற்படி பரிசளிப்பு விழாவில் கல்முனை மாநகர சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா கெளரவ அதிதியாகவும் மர்ஹும் சமீமின் சகோ தரர் எம்.ஐ.அப்துல் ரஊப் விஷேட அதிதியாக வும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை கல்முனை சனிமவுண்ட் வி.கழகத்தின் செயலாளரும், அம்பாறை மாவட்ட உதை பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மேற்கொண்டு வருகின்றார்.

கருத்துரையிடுக

 
Top