கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் , சதோச  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீதின்  நிதி உதவியில்  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்துக்கு  கொடிக்கம்ப மேடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று இடம் பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க  முபீத்  முதற் கட்டமாக 15000 ரூபா நிதியை  கல்லூரி அதிபரிடம் வழங்கியுள்ளார் .

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்  இன்று கல்லூரி அதிபர் ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில்  நடை பெற்றது . வைபவத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் , சதோச  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத் பிரதம அதிதியாகவும் , அகில இலங்கை மாக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் , அமைச்சர் ரிசாத் பதியுதீனினின் இணைப்பாளரும் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்   தலைவருமான சி.எம். ஹலீம் கௌரவ  அதிதியாகவும் , பழைய மாணவர்கள்  பலரும் சிறப்பு அதிதிகளாக  கலந்து கொண்டனர் .
 ஆசிரியர்கள் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி நிலையத்தின் செயலாளர் யு.எல்.எம். பாயிஸ் உட்பட  பொது மக்கள் பலர் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டனர் . 

எமது கட்சியின் மூலம் நற்பிட்டிமுனை கிராமத்துக்கு ஆராவாரம் எதுவுமின்றி எம்மால் முடிந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் . இந்த கொடிக்கம்ப மேடை அமைப்பதற்கு  இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் என்னை சந்தித்து  கோரிக்கையை முன் வைத்தனர். இன்சாஹ் அல்லாஹ்  அந்தக் கோரிக்கை இன்று நிறைவேற்றப் படுகின்றது. அதிகாமிக்கவர்கள் எம்மை புறந்தள்ளினாலும்  எம்மால் முடியுமான பல உதவிகளை எமது கிராமத்துக்கு செய்து வருகின்றோம் . அரசியல் ரீதியாக நாம் பலமான நிலையில் உள்ளோம் எம்மை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கும் ,எமது அபிவிருத்திப் பணிகளை தடுப்பதற்கும் சிலர் முயற்சி செய்கின்றனர் .  இவ்வாறன திட்டங்கள் ஒரு போதும் நட்பிட்டிமுனையில் நிறைவேறாது . 

நாம் நேர்மையான அரசியல் செய்கின்றோம் , எமது தலைவர் றிசாத் பதியுதீன் ஏழைகளின் தோழனாக இருக்கும் வரை எமது பணிகளை எவராலும் தடுக்க முடியாது. நட்பிட்டிமுனையில் உள்ள எமது இரண்டு பாடசாலைகளும்  எமது இரண்டு கண்களாகும். இங்குள்ள குறைகளை முடிந்தளவு நிறைவேறுவதற்கு  நாம் தயாராக உள்ளோம். இதற்காக எம்முடன் நற்பிட்டிமுனை கிராமத்தின் இளைஞர்கள் பலர் எம்முடன் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளனர். 

அதே போன்று நற்பிட்டிமுனை கிராமத்தை யாரெல்லாம் அபிவிருத்தி செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கு நாமும் எமது கட்சியும் கட்சி வேறுபாடின்றி  ஒத்துழைப்பு வழங்குவோம் என அங்கு உரையாற்றும் போது  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் , சதோச  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத் பேசினார் . 
Post a Comment

 
Top