கல்முனை சனிமவுண்ட் வி.கழகத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், கடந்த ஒரு மாதகாலமாக நடாத்திவந்த மர்ஹும் எம்.ஐ.எம்.சமீம் ஞாபகார்த்த கிழக்கு மாகாண ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் வெள்ளிக்கிழமை  கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .

அம்பாறை, மட்டக்களப்பு, திரு கோணமலை மாவட்டங்களை சேர்ந்த 12 கலகங்கள் கலந்து கொண்ட  இப்போட்டியின் இறுதிப் போட்டியில்  ஏறாவூர் யங்ஸ்டார் வி.கழகத்தினரும்  மருதமுனை ஒலிம்பிக் வி. கழகத்தினருக்கும் இடையே  போட்டி இடம் பெற்றது .
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் கழகம் 1-0 கோள்  கணக்கில் வெற்றி பெற்று சமீம் நினைவுக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது . முதலாவது இடத்தைப் பெற்ற மருதமுனை ஒலிம்பிக் கழகத்துக்கு 30ஆயிரம் ரொக்கப் பணமும் கேடயமும் இரண்டாவது  இடத்தைப் பெற்ற ஏறாவூர் யங்ஸ்டார் வி.கழகத்தினருக்கு 15ஆயிரம் ரொக்கப் பணமும் கேடயமும், மூன்றாம் இடத்தைப் பெற்ற கல்முனை பிர்லியண்ட்  கழகத்துக்கு 5ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கி வைக்கப் பட்டது 
கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஐ.ஏ.மனாபின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேனத்தின் தலைவர் அனுர டி.சில்வா கௌரவ அதிதியாகவும் மர்ஹூம் எம்.ஐ.எம்.சமீம் அவர்களின் சகோதரர் எம்.ஐ.ஏ.ரவூப் ஹாஜி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இலங்கை உதைபந்தாட்ட சம்மேனத்தின் உப தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ்,ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், ஏ.ஏ.பஷீர், எம்.எஸ்.உமர் அலி,  உள்ளிட்ட பல பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இடம் பெற்ற நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அதிதிகளும் 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top