கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் , சதோச  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீதின்  அனுசரணையுடன் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கடந்தவருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு கல்வியை தொடர்வதற்காக பணக் கொடுப்பனவு வழங்கப் பட்டது. 

கல்லூரி அதிபர் ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில் இன்று நடை பெற்ற வைபவத்தில் அகில இலங்கை மாக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் , அமைச்சர் ரிசாத் பதியுதீனினின் இணைப்பாளரும் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்   தலைவருமான சி.எம். ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சித்தி பெற்ற மாணவனுக்கு காசோலையை வழங்கி வைத்தார் .

நிகழ்வில் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியர்களான திருமதி அஞ்சிலா தாஹிர்  ,திருமதி பசீரா அமீர்    மற்றும் பிரதி அதிபர், உதவி அதிபர் உட்பட ஆசிரியர்கள் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி நிலையத்தின் செயலாளர் யு.எல்.எம். பாயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் Post a Comment

 
Top