கல்முனையில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம். கல்முனையில் இருந்து சம்மாந்துறைக்கு காரில்  சென்ற நகை கடை  உரிமையாளர் ஒருவரும், கல்முனையை சேர்ந்த மோட்டார் சைக்களில்  வந்த மற்றுமொருவருமே  விபதுக்குள்ளாகியுள்ளனர் .

மோட்டார் சைக்களில்  வந்த  கல்முனை குடியை சேர்ந்த ஜவாஹிர் காரில் சென்ற பசீர் என்பவரும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்களில்  வந்தவர்  வேகத்தை கட்டுப் படுத்த முடியாமல்  காரில் மோதியதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. மோட்டார் சைக்கள்  மோதியதில் காரின் முன்பக்க டயர் பாரிய சத்தத்துடன் வெடித்ததாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர் . இந்த சம்பவம் கல்முனை  கட்டையடி ஹனிபா ஹோட்டல் முன்பாக இடம் பெற்றுள்ளது .

சம்பவத்தில்  காயமடைந்தவர் ஏற்கனவே விபத்தொன்றில் சிக்கி இடது கால் க்சத்திர சிகிச்சை செய்யப் பட்டதென்றும் .தற்போது இடம் பெற்ற விபத்தில்  வலதுகால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது . காயமடைந்தவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கோடு வருகின்றனர். 
கருத்துரையிடுக

 
Top