தனிப்பட்ட தகராறென ஆரம்பத் தகவல்

பொரள்ளை பள்ளிவாசல் மீது நடத்தப் பட்ட கல்லெறி தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்லெறி தாக்குதலினால் பள்ளிவாசலின் முன்புறமாகவுள்ள நான்கு கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
நொறுக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் யன்னலின் வெளிப்புறமாகவே கொட்டிக் கிடப்பதனால் இத்தாக்குதல் பள்ளிவாசலின் உள்ளிருந்தே இடம்பெற்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகிக் கின்றனர். எனினும் சிலர் வாகனத்தில் வந்த சிலராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வாக்குமூலம் அளித் துள்ளனர்.
இது குறிதது விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கூறிய பொலிஸார். நிலைமை தற்போது கட்டுப்பாட்டிலிருப்பதாகவும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையிலீடுபடுத் தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top