அஞ்சல் திணைக்கள உத்தியோஸ்தர்கள் சங்கத்தின் 8வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று  மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்ரோரண்டில் சங்கத்தின் கௌரவ செயலாளர் தேசமானிய யு.எல்.எம்.பைஸர் ஜே.பி. அவர்களின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் வை.எம்.என்.எஸ்.பண்டார தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திரு.வீ.விவேகானந்தலிங்கம் பிரதம அதிதியாகவும் அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தலைவரும் , பிரதி கல்விப்பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.ரி.சகாதேவராஜா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அஞ்சல் திணைக்கள உத்தியோஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அதிதிகளுக்கும் அஞ்சல் திணைக்கள உத்தியோஸ்தர்கள் சங்கத்தின் 8வது வருடாந்த பொதுக்கூட்ட ஞாபகார்த்தமாக அலுவலக பை ( OFFICE BAG) அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் சங்கத்தின் சஞ்சிகையான அ.தி.உ.ச.செய்தி மலரும்             ( U.P.D.O.NEWS) வெளியிட்டு வைக்கப்பட்டது.
 அஞ்சல் திணைக்கள உத்தியோஸ்தர்கள் சங்கத்தின் 8வது  கூட்டறிக்கையினை  சங்கத்தின் கௌரவ செயலாளர் தேசமானிய யு.எல்.எம்.பைஸர் ஜே.பி. அவர்கள் வாசித்ததுடன் கணக்கறிக்கையினை சங்கத்தின் கௌரவ பொருளாளர்  ரீ. குணநாதன் சமர்ப்பித்தார்.
 அதனைத் தொடர்ந்து நடப்பு வருடத்திற்கான உத்தியோஸ்தர்கள் தெரிவும் இடம்பெற்றன.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சகல கொடுப்பளவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.
2.உப அஞ்சல் அதிபர்களுக்கு சனிக்கிழமை கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
3.உப அஞ்சல் அதிபர்களுக்கு வழங்கப்படும் காகிதாதிகளுக்கான கொடுப்பனவு ரூபா 100 இலிருந்து ரூபா 500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
4.உப அஞ்சல் அலுவலகங்களுக்கான வாடகை ரூபா 250 இலிருந்து மதிப்பீட்டறிக்கையின் படி அதிகரிக்கப்பட வேண்டும்.
5.அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
6.சம்மாந்துறை அஞ்சல் அலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டும்.
7.வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் களுவாஞ்சிக்குடி அஞ்சல் அலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டும். 


கருத்துரையிடுக

 
Top