தேர்தல் திணைக்கள அறிவுரைகளை மீறும் அரச ஊழியர்களுக்கு அதிகபட்சம் 3 வருட சிறை தண்டனை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்திற்கமையவே இவ்வதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
 
அரச மற்றும் அரச கூட்டுத்தாபன ஊழியர்கள் தேர்தல் திணைக்கள அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் தண்டிக்கப்படுவர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த கட்சிக்கே அரச ஊழியர்கள் ஆதரவு வழங்கினர். அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் கண்காணிப்பு நிறுவனங்களும் அதனை உறுதி செய்துள்ளன.
 
எனினும் 19ஆம் திருத்தச்சட்டத்திற்கமைய பக்கச்சார்பு அற்ற வகையில் அரச ஊழியர்கள் செயற்படவேண்டும். அதனை மீறும் பட்சத்தில் தண்டனைக்குள்ளாவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
அரச சேவைகளில் இருந்து தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெற்றபோதும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரியவே கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துரையிடுக

 
Top