கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கவனிப்பாரற்று  காடாகவும் ,பள்ளம் மேடாகவும்  , இருழடைந்தும்  கிடந்த நற்பிட்டிமுனை  மையவாடி  வீதிக்கு  நல்ல காலம் பிறந்துள்ளது.

குறித்த வீதியில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒப்பமிட்டு இந்த வீதியின்  அவலத்தை  கல்முனை மாநகர உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம். முபீதின் கவனத்துக்கு  நேற்று 25.06.2015  எழுத்து மூலம் கொண்டு வந்தனர் .

குறித்த விடயத்தை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ,அமைச்சருமான   றிசாத்  பதியுதீனின்  கவனத்துக்கு  மாநகர சபை உறுப்பினர்  கொண்டு வந்த போது  அந்த மக்களின்  நலன் கருதி உடனடியாக  அந்த வீதியையும் நிர்மாணித்து ,அந்த வீதிக்கான மின் இணைப்பையும் வழங்க  உடனடி நடவடிக்கை  எடுத்து அதற்க்கான நிதியும் வழங்கி வைத்தார் . அமைச்சரின் உத்தரவுக்கமைய  இன்று  26.06.2015 இந்த வீதிக்கான  மின்சாரம் வழங்குவதற்கான மின் கம்பங்கள் நடும் வேலை திட்டமும் , வீதி செப்பனிடும் வேலை திட்டமும்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் , சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீதின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப் பட்டது .

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் , அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்பாளரும் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்   தலைவருமான சி.எம். ஹலீம், அந்த அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ்  உட்பட பொது மக்கள் பலரும் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர் .   கலந்து கொண்ட மக்கள்  தங்களின் நீண்ட நாள் தேவையை  நிறைவு செய்து தந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்  அவர்களுக்கும் , மாநகர சபை  உறுப்பினர் முபீதுக்கும் நன்றி தெரிவிதனர். 
கருத்துரையிடுக

 
Top