நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த சச்சிதானந்தம் மதிதயான் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு, மண்டூரில்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று பேரை  ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் மேலும் கூறினர். முன்னதாக பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மற்றைய இருவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்  மண்டூர் மதிதயான் கொலை- எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர் 03 பேர் கைது 

கருத்துரையிடுக

 
Top