கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ராஜரெட்ணம் முரளீஸ்வரன் அவர்கள் அகில இலங்கை ரீதியில் சிறந்த வைத்திய நிருவாகியாக தெரிவு செய்யப்பட்டமையினை இட்டு கல்முனை சிவில் சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 
கல்முனை சிவில் சமூக  அமைப்பின் தலைவர் பொன் செல்வநாயகம் தலைமையில்  இடம் பெற்ற  இந்நிகழ்வின் போது சிறந்த வைத்திய நிருவாகியாக தெரிவு செய்யப்பட்ட வைத்திய அத்தியட்சகர் ராஜரெட்ணம் முரளீஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு அவரை பாராட்டி வாழ்த்துப்பத்திரமும் வழங்கப்பட்டது.Post a Comment

 
Top