கல்முனை பிரதேசத்தில் Dialog eZ Cash மூலம் பண மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பலினால் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ஏமாற்றப் பட்டு 30 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளதாக கல்முனை பொலீசில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது .

குறித்த கணக்காளருக்கு இன்று (29) டயலொக் தொலை பேசி இலக்கமொன்றிலிருந்து அழைப்பு கிடைக்கப் பெற்றதாகவும் தனக்கு 15 இலட்சம் ரூபா பணப் பரிசு கிடைக்கவிருப்பதாகவும் இப்பணத்தைப் பெறுவதற்கு உடனடியாக காப்புறுதிப் பணமாக 30ஆயிரம் ரூபா வைப்பீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை நம்பிய கணக்காளர் 30ஆயிரம் ரூபா பணத்தையும் Dialog eZ Cash நிலையம் ஒன்றில் செலுத்தியுள்ளார் . பரிசுப் பணத்தைப் பெறுவதற்கு தனக்கு வந்த அழைப்பு தொலை பேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்திய போது அது தவறான இலக்கம் என அறிவிக்கப் பட்டதாக கணக்காளர் போலீஸில் செய்யப் பட்டுள்ள முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார் .

Dialog eZ Cash மூலம் பண மோசடி இடம் பெறுவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மக்களை தெளிவு படுத்தும் வகையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் ,மத வழிபாட்டுத்தலங்கள் ,சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தல் ஏற்கனவே விடுக்கப் பட்ட நிலையில் சகல விடயங்களையும் அறிந்தவரான கணக்காளர் மிக நுட்பமாக ஏமாற்றப் பட்டுள்ளதால் மிக அவதானத்துடன் மக்கள் செயல் பட வேண்டும் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ,கப்பார் மக்களைக் கேட்டுள்ளார் அதிக ஆசை அதிக நட்டம்

கருத்துரையிடுக

 
Top