பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இன்று மாலை   இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் ஸ்தலத்திலே பரிதாபகரமான நிலையில் பலி.
கோமாரி – 01 ஐச் சேர்ந்த சூரியதாசன் சுஜிஸ்தன் (வயது 19), ஜோகராஜா கிருபாகரன் (வயது 18) ஆகிய இரு இளைஞர்கள் பொத்துவிலில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோமாரி நோக்கிச் சென்ற வேளை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.பஸ் வண்டி சாரதி பொத்துவில் பொலீஸாரிடம் சரணடைந்ததுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

 
Top