அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக நேற்று வரை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இணக்கப்பாட்டுக்கு வர முடியவில்லை.
20வது திருத்தச் சட்டத்தில் இணங்க முடியாத விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு கலந்துரையாடி அடுத்த வாரம், கட்சிகளின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top