சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா  நோய் பிரிவு ஏற்பாடு செய்துள்ள  விழிப்புணர்வு ஊர்வலமும் அறிவுறுத்தல் கூட்டமும்  திங்கட் கிழமை (01)   பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  நடை பெறவுள்ளது .
தொற்றாநோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் தலைமையில் இடம்பெறும்  விழிப்புணர்வு ஊர்வலம்  கல்முனை  ஹிஜ்ரா சந்தியில் இருந்து தரவை கோவில் சந்திவரை நகர் முழுவதுமாக  இடம்   பெறவுள்ளது.
இந்த விழிப்பு ஊர்வலத்தில் கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்கள் ,பொலிஸார் , கல்முனை வடக்கு,தெற்கு ,நாவிதன்வெளி ,சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் . ஊர்வலத்தை தொடர்ந்து  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விழிப்புணர்வு கூட்டமும் இடம் பெறவுள்ளது.

Post a Comment

 
Top