ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஹேமால் குணசேகர ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சந்திரிசிறி சூரியாராச்சி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்
2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்.
3. ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர்.
4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர்.
5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர்.

கருத்துரையிடுக

 
Top