(பி.எம்.எம்.ஏ.காதர்)

குவைத் நாட்டில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும்  றஹ்மா இன்டநெசனல் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் இலங்கை கிளை நிறுவனமான மேசி லங்கா நிறுவனத்தினால் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபா செலவில் மருதமுனை பிரன்ஞ்சிட்டி புதிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாசல் திறப்பு விழா பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.ஏ.அத்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

இதில் மேசி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நஸ்ர் ஹஸன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய பள்ளிவாசலைத் திறந்து வைத்தார். மேசி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எம்.ஆர்.எம்.முனாஸ் நழீமி ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தினார்.நீண்ட காலமாக தகரக் கொட்டில் ஒன்றில் சிறிய பள்ளிவாசல் இயங்கி வந்தது.  இந்த நிலையில் மேசி லங்கா நிறுவனம் இந்த அழகிய பள்ளி வாசலை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. 
இப்பள்ளிவாசல் திறப்பு விழாவில் புதிய பள்ளிவாசலின் நிர்வாகிகள் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிகள்,அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஊர்பிரமுகர்கள் உள்ளிட்ட பெரும் தொகையானோர்  கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பள்ளிவாசலைத் திறந்து வைத்த மேசி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நஸ்ர் ஹஸன் அவர்களுக்கு பள்ளிவாசல் தலைவர்   எம்.ஏ.ஏ.அத்கம் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றினைந்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.சமூக சேவையாளர் தோழர் இஸ்மாயில் (அப்துல் ஹமீட்) நஸ்ர் ஹஸன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.Post a Comment

 
Top