(பி.எம்.எம்.காதர்)

வடக்கிலிருந்து பயங்கரவாதிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகளுக்கு எதிராக இன்று மருதமுனையில் கவனயீர்ப்;பு ஆர்ப்பாட்டம்  ஒன்று நடைபெற்றது.
ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
இங்கு “பேரினவாதிகளே வடபுல முஸ்லிம்களை  வாழவிடு முஸ்லிம் தலைமைகளே சமூகத்திற்காக ஒன்றுபடுங்கள்இபொதுபல சேனாவே முஸ்லிம்களைச் சீண்டாதே உள்ளீட்ட பல சுலோகங்களை கவனயீர்ப்;பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.


Post a Comment

 
Top