அ.இ.ம.கா.இளைஞர் அமைப்பாளர் அன்வர் எம் முஸ்தபா

(பி.எம்.எம்.ஏ.காதர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். அவரின் மறைவுக்குப்  பின்னர் புதிய தலைமை மக்கள் நலனை விட்டு விட்டு தனது நலனிலேயே முழு அக்கறையும் செலுத்திவருகின்றது என குற்றம் சுமத்தினார் . இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளரும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபாதெரிவித்தார்.

மருதமுனையில் இன்று  இரவு நடை பெற்ற நிகழ்வொன்றில் பிரதமஅதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.அவர் மேலும் உரைற்றுகையில் தெரிவித்ததாவது :-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பல தியாகங்களுக்கு மத்தியில்தான்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மக்கள் மத்தியில் கொண்டுவந்தார்.
இக்கட்சியின் வருகையால் பலஉயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. இருந்த போதிலும் மக்கள் நலனுக்காகவே அவரின் பணிகள் தொடர்ந்தன இதனால் முஸ்லிம் சமூகம் மாத்திரமன்றி தமிழ் ,சிங்கள சமூகங்களும் பலநன்மைகளைப் பெற்றன ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் வந்த தலைமை முஸ்லிம் சமூகம் பயன்படும் படி
எந்தக் காரியத்தையும் செய்யவில்லை.
தன்னையும்,தனது குடும்பத்தையும் வளர்த்துக் கொள்வதிலேயே அவரது அரசியல் பயணம் தொடர்கின்றது கடந்த ஜனாதிபத் தேர்தலுக்குமுன் கரையோர மாவட்டம் தரவில்லை என்பதற்காக மஹிந்த அரசைவிட்டு

வெளியேறிய முஸ்லிம் காங்கிரஸ் இன்று மைத்திரியின் ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புக்ளை பெற்றுக் கொண்டு மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு  காணமுடியாமல் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.  
அம்பாறைமாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைஎன்று சொல்லி தம்பட்டம் அடிப்பவர்கள் கல்முனை பிரதேச செயலகத்திற்கு ஒரு முஸ்லிம் பிரதேச செயலாளரை நியமிக்க முடியாதவர்களாக இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு நடைபெற இருக்கின்ற தேர்தல்கள் நல்லபாடத்தைப் புகட்டும் என்பதில் சந்தேகமில்லை எனஅவர் மேலும் தெரிவித்தார்.    

Post a Comment

 
Top