மேலும் பத்து அமைச்சர்கள் பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த பத்து பேர் எதிர்வரும் நாட்களில்  பதவி விலக உள்ளனர்.

 இரண்டு தடவைகளில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக இவர்கள் பதவி விலக உள்ளனர்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவிகளை இராஜினாமா செய்ய உள்ளனர்.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டாம் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிலருக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை பகடைக் காய்களாக பாவிப்பதாக  தெரிவித்து நான்கு அமைச்சர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

 
Top