யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபரும்  கல்முனை உவெஸ்லி கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியருமான  ஆசான் அருளானந்தம்  இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பருத்திதுறை முதலாம் கட்டை சந்தியில் அரச திணைக்கள வாகனம் ஒன்று மோதியுள்ளது.
ஆசான்  கனகசபாபதி அருளானந்தம்  இறக்கும் போது  அவருக்கு  வயது ( 61)ஆகும் . அன்னாரின் மறைவுக்கு  கல்முனை நியூஸ் இணைய தளத்தின் பணிப்பாளரான நான்  அவரது மாணவன் என்ற அடிப்படையில் அன்னாரின் குடும்பத்தவருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் - யு.எம்.இஸ்ஹாக் 

Post a Comment

 
Top