கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீவிர கண்காணிப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், கடந்த 2014-03-27ம் திகதி சாய்ந்தமருது  பிரதேசத்தில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அவர்களது கடமையை செய்வதற்கு இடைஞ்சல்  விளைவித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கல்முனை பொலிசார்  கல்முனை நீதிவான் நீதி மன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த நபர்மீதான விசாரணை கல்முனை நீதிவான்  நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சன் முன்னிலையில் விசாரிக்கப் பட்ட போது  குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று கல்முனை நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சனினால்   குறித்த குற்றவாளிக்கு 1500ரூபாய் தண்டம் விதித்ததுடன் 5 வருட ஒத்திவைக்கப்பட்ட, 1வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தத்துடன் சூழலுக்கு  பாதிப்பு ஏற்படுத்திய  குற்றத்துக்காக மேலும் 2000 ரூபா தண்டம் விதித்தார் .

கருத்துரையிடுக

 
Top