ரவுப் ஹக்கீமின் சகோதரர் ரவுப் ஹசீரின் முகநூலில் தெரிவிக்கப் பட்டிருப்பவை  

நேற்று இரவு ஹிருவில் ஒளி பரப்பான விவாதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . நள்ளிரவு கடந்தும் தூக்கம் மறந்து பார்க்குமளவு சூடு பறந்தது .
சுஜீவ தகுந்த ஆவண தயார்படுத்தலுடன் வந்திருந்து ஆதாரங்களுடன் பேசியபோது
ரிசாத் இடையிடையே குறுக்கிட்டாலும் குழப்பம் ஏற்படுத்தாது கண்ணியத்துடன் நடந்துகொண்டது " மின்னல்" நிகழ்ச்சிக்குப் போய் வீதி சிரிக்க சண்டை பிடிக்கும் அரசியல் வாதிகளுக்கு பாடமெடுப்பது போல இருந்தது .

ரங்காவுக்கும் படிப்பதற்கு நிறைய இருந்தது !
மிகவும் அமைதியாக ஆழமான பார்வையுடன் அவதானித்துக்கொண்டிருந்த ரிசாத் மிகவும் பொருத்தமான முறையில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக தனது இறுதி வாதத்தை முன்வைத்த திறமையை பாராட்டியே ஆகவேண்டும் .
அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள் .

அது சரி ... ஏன் உங்கள் ஹகீம் மௌனமாக இருக்கிறார் என்று நீங்கள் பின்னூட்டம் போடா முன்னரே பதிலை சொல்லிவிடுகிறேன் .
எங்கு மௌனமாக இருக்கவேண்டும் , எப்போது எப்படி எங்கு அடிக்கவேண்டும் என்பதெல்லாம் உண்மையான அரசியல்வாதிக்கு நன்கு தெரியும் . ஹகீம் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது ரிசாத் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் . அது போதும்தானே . 
ஆங்கிலத்தில் எதோ சொல்வார்களே ......
Too many cooks.....

வடபுல மக்களின் விடிவுக்கான துஆக்கள் . ஆமீன் ! என தெரிவிக்கப் பட்டுள்ளது 

கருத்துரையிடுக

 
Top