புனித ரமழான் மாதத்துக்காக சவூதி அரேபியா அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவம் சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது.
 கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த உலமா சபைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அந்தந்தப் பகுதி பள்ளிவாயல் நிர்வாகிகள் ஊடாகப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு உலமா சபைப் பிரதிநிதிகளிடம் சுமார் 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன. 
 இந்தப் பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஹலீமினால் மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை  அம்பாறை மாவட்டத்துக்கு எப்போது வழங்கப் படும் . நோன்பு தொடக்கி முடியும் சந்தர்பத்திலா என  கேள்விகள்   தொடங்கியுள்ளன .

கருத்துரையிடுக

 
Top