இன்று (22) குடியரசுத்தினமாகும்.பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை முழுமையாக விடுதலையடைந்த இத்தினம் குடியரசுத்தினமாக கொண்டாடப்படுகிறது.
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ந போதும் 1972 மே மாதம் 22 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் முலமே இலங்கையர்ளுக்கு சுயாட்சியுடன் கூடிய சுதந்திரம் கிடைத்தது.

 உள்  நாட்டு அலுவல்கள்  அமைச்சின் சுற்றறிக்கைக்கு  அமைவாக  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று 22.05.2015 குடியரசு தினம் அனுஸ்டிக்கப் பட்டது.
நிருவாகதுக்குப் பொறுப்பான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில் வாகனம் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில்  வலயக் கல்வி அலுவலக  கணக்காளர்  எல்.ரீ.சாலிதீன் , நிருவாக உத்தியோகத்தர்  திருமதி ஜி.பரம்சோதி  உட்பட  உத்தியோகத்தர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.
காலை 8.30 மணிக்கு தேசிய  கொடி  ஏற்றி வைக்கபட்டதுடன்  அதனை தொடர்ந்து  குடியரசு தின வைபவமும் இடம் பெற்றது.

இந்த நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களான நாமும் எமது நடவடிக்கைகளை  மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அரச சுற்று நிருபங்களின் பிரகாரம்  நாம் செயற்படுவதுடன்  இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களை  நினைவு படுத்துவதும் அவர்களைக் கௌரவப் படுத்துவதும் எமது பொறுப்பாகும் என பிரதிக் கல்விப் பணிப்பாளர் மயில் வாகனம் . அங்கு குறிப்பிட்டார்.

கணக்காளர் எல்.ரீ. சாலிதீன் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் பற்றி  15 நிமிடங்கள் உரையாற்றினார். 

கருத்துரையிடுக

 
Top