கல்முனையில் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற  வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்திய  சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் 

கல்முனை  ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது . இரண்டு  மோட்டார்  சையிகல்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குபெட்டா இயந்திரத்தில் அடிபட்டு  வீழ்ந்ததில் மோட்டார் சைக்களில்  பயணித்த இருவரும்  பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்திய சாலையில்  அனுமதிக்கப் பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக கல்முனை  போலிஸ் நிலைய  போக்குவரத்துப்  பிரிவு  அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
விபத்து தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்ததுடன் குபெட்டா இயந்திர சாரதியையும் விசாரணைக்கு போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் 

Post a Comment

 
Top