கல்முனை நியூஸ் இணைய  தளத்தின் செய்திக்கு பலன் கிடைத்துள்ளது . மருதமுனை மக்காமாடி வீதியில் குவிக்கப் பட்டிருந்த வடி கான் மண் அகற்றப் பட்டுள்ளது . கல்முனை மாநகர ஆணையாளருக்கு நன்றிகள் தொடர்புடைய செய்தி 

மருதமுனை மக்காமாடி வீதி வடிகானை   கல்முனை  மாநகர சபை ஊழியர்கள்  சுத்தப் படுத்தி  வடிகானில் இருந்த  மண்ணை வீதி ஓரத்தில் குவித்து வைத்துள்ளனர் .
கடந்த புதன்கிழமை குவிக்கப் பட்ட மண் இன்றுவரை அகற்றப் படாத நிலையில் உள்ளதால் இந்த வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.
இதைத்தானும் செய்யா விட்டால் மாநகர சபைக்கு மருதமுனையில் இருந்து தெரிவு செய்யப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் வேறு எதனை செய்யப் போகின்றீர்கள்?  அதற்கும் மேலாக கல்முனை மாநகர ஆணையாளர் மருதமுனையை  பிறப்பிடமாக கொண்டவர்  ஆணையாளருக்குள்ள அதிகாரம் வேறு எங்கு பிரயோகப் படுத்தப் படவுள்ளது. கல்முனையை மட்டும் அழகு படுத்தாமல் அயல் கிராமங்களின் பக்கமும்  உங்கள் பார்வையை திருப்புங்கள். மாநகர ஆணையாளரே இது உங்கள் கவனத்துக்கு ! 

Post a Comment

 
Top